இந்திய சுதந்திரத்தின் 76 வது வருடம் தொடங்கும் நிலையில், வீடுதோறும் கொடி ஏற்றும் திட்டத்தினை பிரதமர் மோடி அறிவித்தார். பிரபலங்கள், பொதுமக்கள் என நாட்டு மக்கள் அனைவரும் தங்கலுடைய வீடுகளில் கொடி ஏற்றி அந்த புகைப்படத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தனர். சுமார் 6 கோடி மக்கள் செல்ஃபி படத்தை பதிவேற்றி உள்ளனர். இந்த நிலையில் சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இன்று காலை 11 மணிக்கு மக்கள் தேசிய கீதம் பாட வேண்டும் என்று மகாராஷ்டிரா மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மாநிலம் முழுவதும் காலை 11 மணி முதல் 11.01 மணிக்குள் தேசிய கீதத்தை பாடி முடிக்க வேண்டும் என்றும், மாநில அரசின் அனைத்துத் துறைகள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் இதில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்றும் மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.