Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மறந்தும் இந்த தப்ப பண்ணாதீங்க…. 6 மாதம் சிறை தண்டனை…. அதிரடி உத்தரவிட்ட ஆட்சியர்…!!

முக கவசம் அணியாமல் வெளியே செல்பவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் வரும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக ஊட்டி போன்ற பல்வேறு சுற்றுலா இடங்கள் இருக்கின்றன. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த சுற்றுலாத்தலங்கள் தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் திறக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த சுற்றுலா தளத்திற்கு வரும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்ட சுற்றுலா பயணிகளுக்கு சில அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி இந்த பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகள் தமிழக அரசிடமிருந்து கொரோனா பரிசோதனை செய்து பெற்று கொண்ட சான்றிதழைக் கொண்டு வரவேண்டும்.

மேலும் முக கவசம் அணிந்து வரவேண்டும் தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து உள்ளூர் மக்கள் முக கவசம் அணியாமல் சுற்றி வருவதால் பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் வருபவர்களுக்கு ஆறுமாத சிறை தண்டனை வழங்க இருப்பதாகவும்,  ரூ. 200 அபராதம் விதிக்கப்பட இருப்பதாகவும்  அம்மாவட்ட ஆட்சியர் திவ்யா அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |