Categories
தேசிய செய்திகள்

மறந்துராதீங்க! ரூ.4000 நிதியுதவிக்கு விண்ணப்பிக்க…. இன்றே கடைசி நாள்…!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.

இந்த நிதியுதவியானது 2 ஹெக்டீருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறது.  இதுவரை ஏழு தவணைகளாக பிரிக்கப்பட்டு விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.  இதில் எட்டாவது தவணைப் பணம் இன்னும் ஒரு சில விவசாயிகளுக்கு சென்று சேரவில்லை என்று கூறப்படுகிறது. எனவே இந்தத் திட்டத்தில் இன்னும் பதிவு செய்யாத விவசாயிகள் ஜூன் 30-க்குள் பதிவு செய்ய கால அவகாசம் வழங்கியது. இந்த கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.

எனவே விவசாயிகள் அதற்குள் பதிவு செய்தால் இந்த நிவாரண உதவியை பெற முடியும். இதுவரை ஒரு தவணை கூட பெறாத விவசாயிகள் இன்றைக்குள் பதிவு செய்தால் எட்டாவது மற்றும் ஒன்பதாவது தவணைப் பணம் சேர்த்து வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதற்கு ஆதார வசியமாகும். ஆதார் இல்லாமல் இத்திட்டத்தில் நிதி உதவி பெற முடியாது. எனவே கால அவகாசம் முடிவதற்குள் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா? என்பதையும் சரிபார்த்து கொள்ளவும்

Categories

Tech |