குடும்ப அட்டைகள் மூலம் மத்திய அரசின் பொது வினியோகத் துறை யின் கீழ் கொடுக்கப்படும் இலவச உணவு பொருட்களை மக்கள் வாங்கி பயனடைந்து வருகின்றனர். இதில் ஒரு சில தகுதியில்லாத நபர்கள் இலவச உணவு பொருட்களை வாங்கி வீணடிப்பது அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனை அடுத்து இவ்வாறு பொருட்களை வாங்கி வீணடிப்பவர்களுடைய குடும்ப அட்டைகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வந்தது. இந்தவகையில் தகுதியற்றவர்கள் குடும்ப அட்டைகளை ஒப்படைப்பதற்கான காலக்கெடு ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது.
அப்போது உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் இதுவரை 997 பேர் மட்டுமே தங்களுடைய கார்டுகளை திரும்ப கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இதற்கு தகுதி இல்லாதவர்கள் தங்களுடைய குடும்ப அட்டைகளை ஒப்படைப்பதாக காலக்கெடு தற்போது மே-20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியில்லாதவர்கள் ரேஷன் அட்டைகளை ஒப்படைக்க வேண்டும் அப்படி ஒப்படைக்காதவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்போது வரை எத்தனை பேர் அட்டை வைத்திருக்க தகுதி இல்லாதவர்கள் மற்றும் தகுதியுடையவர்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வ மதிப்பீடு எதுவும் இல்லை என்று மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.