Categories
தேசிய செய்திகள்

மறந்து விடாதீர்…. மறந்தும் இருந்துவிடாதீர்…. டிச-31 கடைசி தேதி…!!!!

வருமான வரி கணக்கை அபராதம் இல்லாமல் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிய இன்னும் இரண்டு நாட்களே உள்ளன.

2020-2021 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதி டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கு முன்னதாக ஜூலை 31 மற்றும் செப்டம்பர் 30 என இரண்டு முறை நீட்டிக்கப்பட்டு தற்போது மூன்றாவது முறையாக டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வருமான வரி கணக்கை அபராதம் இல்லாமல் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிய இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. டிச-31க்குள் தாக்கல் செய்ய தவறினால் ரூ.5 லட்சத்துக்கும் மேல் வருமானம் உள்ளவர்கள் ஆயிரம் ரூபாயும், 5 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் ரூ.5000 தாமத கட்டணம் செலுத்தி 2022 ஜனவரி முதல் மார்ச் 31 க்குள் கணக்கு தாக்கல் செய்யலாம்.

Categories

Tech |