Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“மறவா மதுரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு”… காளை முட்டியதில் 11 பேருக்கு காயம்…!!!

மறவா மதுரையில் சிறப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றததில் ஏராளமான வீரர்களும் காளைகளும் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காரையூரில் இருக்கும் மறவாமதரை ஒலியநாயகி அம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றன. மாவட்ட உதவி ஆணையர் மாரி பொன்னமராவதி, தாசில்தார் ஜெயபாரதி உள்ளிட்டோர் தொடங்கி வைத்தார்கள். இந்த ஜல்லிக்கட்டில் திண்டுக்கல், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, காரையூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 737 காளைகளும் 195 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றார்கள்.

காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக ஒன்று அவிழ்த்து விட காளைகளை வீரர்கள் அடக்கினார்கள். மேலும் வீரர்களை காளைகள் முட்டியதில் 11 பேர் காயம் அடைந்து உள்ளனர். ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும் வீரர்களால் அடக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க நாணயம், கட்டில், மின்விசிறி உள்ளிட்டவை பரிசுப் பொருட்களாக வழங்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டில் ஏராளமானோர் கலந்துகொண்டு ரசித்தனர். இந்த ஜல்லிக்கட்டை விழா குழுவினரும் பொதுமக்களும் ஏற்பாடு செய்திருந்தார்கள் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |