Categories
உலக செய்திகள்

மறுஅறிவிப்பு வரும் வரை விமான சேவை ரத்து…. பிரபல நாட்டின் அதிரடி அறிவிப்பு….!!

ரஷ்யா நாட்டிற்கு வியட்நாம் ஏர்லைன்ஸ் நிறுவனமானது தனது விமான சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

ரஷ்யாவிற்கு வரும் 25-ஆம் தேதி முதல் வியட்நாம்  ஏர்லைன்ஸ் நிறுவனமானது தனது விமான சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.  மேலும் ரஷ்யாவிற்கு தனது விமானங்களை இயக்குவதற்கான விதிமுறைகள் மற்றும் தேவைகள் குறித்த ஆலோசனைகள் நடத்தி வருவதாலேயே விமான சேவையை அந்நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளதாக வியட்நாம் நாட்டு அரசு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

சோவியத் ஒன்றிய காலத்தில் இருந்தே ரஷ்யாவும் வியட்நாமும் நெருங்கிய நட்பு நாடாக உள்ளது. மேலும் உக்ரைனின் படையெடுப்பிற்கு பின் வியட்நாம் ரஷ்யாவிற்கு கண்டனம் எதுவும் தெரிவிக்கவில்லை.  இதனை அடுத்து ரஷ்யாவிற்கு வியட்நாம் ஏர்லைன்ஸ் நிறுவனம் மட்டுமே  விமானங்களை இயக்கி வந்துள்ளதாகவும் ரஷ்யா மறு அறிவிப்பு தெரிவிக்கும் வரை தனது சேவைகளை நிறுத்தி வைப்பதாகவும் வியட்நாம் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |