பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மறு கூட்டல் வேண்டி விண்ணப்பித்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் 27 ஆம் தேதி மதியம் வெளியிடப்படுகிறது என அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடபட்டுள்ள அறிக்கையில், “மறு கூட்டல் வேண்டி விண்ணப்பித்த மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் 27 ஆம் தேதி மதியம் அரசு தேர்வு துறையின் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.
மேலும் மறுகூட்டல் மதிப்பெண் மாற்றுத்துடன் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களையும் அதில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மதிப்பெண் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தும் இப்பட்டியலில் இடம் பெறவில்லை என்றால் அந்த பதிவு எண்களுக்கான விடைத்தாள்களில் மதிப்பெண்களில் எவ்வித மாற்றமும் இல்லை” என குறிப்பிடபட்டுள்ளது.