விஜய் டிவியில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் நடிகை ஷெரின். இவர் தனக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. திரையுலக பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஏற்கனவே நடிகர்கள் மகேஷ் பாபு, சத்யராஜ், நடிகைகள் த்ரிஷா, ஸ்வரா பாஸ்கர், இசையமைப்பாளர் தமன் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகை ஷெரின், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தடுப்பூசி செலுத்தியும் தனக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் இருப்பினும் விரைவில் குணமாகி விடுவேன் என்றும் ஷெரின் ஆனது வீடியோவில் தெரிவித்திருந்தார்.