Categories
உலக செய்திகள்

மறுபடியுமா….!! ஒமைக்ரான் வைரஸின் மாறுபாடுகள்…. ஆராய்ச்சியில் தெரிய வந்த முடிவுகள்….!!!

ஒமைக்ரான் வைரஸ் மாறுபாடுகள் பற்றி டென்மார்க்கில் உள்ள ஸ்டேடன்ஸ் சீரம் இன்ஸ்டிடியூட்டின் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தி உள்ளனர்.
கொரோனா வைரஸ் சீனாவின் ஊகான் நகரில் 2019-ஆம் ஆண்டு  டிசம்பர் மாதம் முதன் முதலாக கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அது ஆல்பா,பீட்டா, காமா, டெல்டா என உருமாற்றங்கள்  அடைந்து வருகிறது. அந்த வரிசையில் தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 24-ந் தேதி உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. மேலும் ஒமைக்ரான் உலகமெங்கும் பரவி உள்ளது. இந்நிலையில் ஒமைக்ரானின் புதிய வடிவம் இங்கிலாந்து நாட்டில் முதலில் வெளிப்பட்டு அதற்கு பிஏ.2 என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஒமைக்ரான் வைரஸ் மாறுபாடுகள் பற்றி டென்மார்க்கில் உள்ள ஸ்டேடன்ஸ் சீரம் இன்ஸ்டிடியூட்டின் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தி உள்ளனர். மேலும் ஒமைக்ரான் வைரசின் வகைகள் பிஏ.1 மற்றும் பிஏ.2  ஆகும். தற்போது பிஏ.1 தொற்று பாதிப்புக்கு பின்னர் ஏற்படுகிற இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியில் இருந்து பிஏ.2 தப்ப முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிஏ.1 தொற்று பாதிப்புக்கு பின்னர் 187 பேருக்கு பிஏ.2 தொற்று கண்டறியப்பட்டுள்ளது.மேலும்  18 லட்சம் தொற்றுகளை ஆராய்ந்ததில் இது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து 67 பேருக்கு 20 முதல் 60 நாள் வரையிலான இடைவெளியில் மறுதொற்று  ஏற்பட்டுள்ளது. பாதிப்புக்கு உள்ளானோரில் பெரும்பாலோர் இளைஞர்கள், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள், லேசான தொற்று பாதிப்பை சந்தித்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில்  சேர்க்கப்படவில்லை. அதற்கான தேவையும் எழவில்லை. மேலும் ஆய்வின் முடிவு ஒமைக்ரான் வைரசின் 2 வெவ்வேறு வடிவம் ஒருவரை தாக்குவது சாத்தியம்தான் என்பது தெரியவந்துள்ளது.

Categories

Tech |