Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“மறுபடியும் இத நடத்தக்கூடாதுனா”, நாங்க என்ன செய்வோம்…. கலெக்டர் அலுவலகம்…. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பாக நாட்டுப்புற கலைஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனால் அரசாங்கம் சில கட்டுப்பாடுகளை மீண்டும் விதித்துள்ளது. அதில் கோவில் திருவிழாக்களை நடத்த தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவால் கிராமப்புற கலைஞர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் கரகாட்டகாரர்கள், வில்லிசை வாசிப்பவர்கள் உட்பட பல கிராமப்புற கலைஞர்கள் திருநெல்வேலியிலிருக்கும் கலெக்டர் அலுவலகத்திற்கு முன்பாக திரண்டனர்.

மேலும் அவர்களது கிராமப்புற கலை நிகழ்ச்சியை நடத்தி வளாகத்தை முற்றுகையிட்டனர். இதற்கிடையே ஊரடங்கில் தளர்வை ஏற்படுத்தி கோவிலில் திருவிழாவும், கலைநிகழ்ச்சிகளும் நடைபெற அனுமதி கோரி சில நாட்டுப்புற கலைஞர்கள் அலுவலகத்தினுள் சென்று கலெக்டரிடம் மனுவை கொடுத்தனர்.

Categories

Tech |