பீஸ்ட் படம் குறித்து நடிகை கஸ்தூரி கருத்து கூறியுள்ளார்.
பிரபல நடிகையான கஸ்தூரி தற்போது சர்ச்சை நாயகியாக வலம் வருகின்றார். இவர் தற்போது பீஸ்ட் திரைப்படம் பற்றி பேசியுள்ளார். நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியான திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படத்திற்கு விமர்சனங்கள் குவித்து வருகின்றது. படத்தையும் நெல்சனையும் விமர்சித்து வருகின்றனர். சிலர் விஜய்க்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். இந்நிலையில் கஸ்தூரி கூறியுள்ளதாவது, “நான் விஜயின் மிகப்பெரிய ரசிகை தான். பீஸ்ட் படத்தை நான்கு முறை கூட பார்ப்பேன். ஆனால் மற்றவர்கள் ஒரு முறையாவது பார்க்க வேண்டுமல்லவா.
ரசிகர்களுக்காக மட்டும் படம் எடுக்காமல் பொது மக்கள் விரும்பும் வகையில் படம் எடுக்க வேண்டும். படத்தின் கதைக்கும் பட்ஜெட்டிருக்கும் சம்பந்தம் இல்லை. படத்தின் கதைக்கும் வெற்றிக்கும் கூட சம்பந்தம் இல்லை. மீண்டும் கோல்டன் ஏஜ் ஆப் தமிழ்சினிமா வர வேண்டும் என்ற நிலையில் தான் இருக்கின்றோம். ராமராஜன் இளையராஜா காம்பினேஷனில் கம்மியான பட்ஜெட்டில் பெரிய வெற்றியை எப்படி கொடுக்கலாம். நமது தமிழ் மணம் மாறாமல் கொடுத்தார்கள். பான் இந்தியா படத்திற்கும் தமிழ் கலாச்சாரத்தை எடுத்துச் சென்றால் நன்றாக இருக்கும்” என கூறியுள்ளார்.