நாடு முழுவதும் அனைத்து நடவடிக்கைகளும் முடக்கபட உள்ளதாக வெளியான செய்திகள் பொய்யானவை என ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா செயலணி கூட்டத்தில் சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் அத்தியாவசிய திட்டங்களை விடுத்து மற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மொத்தமாக முடக்க உள்ளதாக கடந்த சனிக்கிழமை தீர்மானம் செய்யப்பட்டுள்ளது என சில செய்திகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அந்த செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்று ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் நிலாந்த பிரேமரத்ன கூறியுள்ளார்.
இதனையடுத்து இத்தகைய செய்திகள் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகத்தில் வெளியானதால் அதனை மறுக்கும் விதமாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ஒரு அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். மேலும் முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டால் ஊடகங்களுக்கு தெளிவாக தெரிவிக்கப்படும் என்றும் பொய்யான செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.