Categories
உலக செய்திகள்

மறுபடியும் முதல்ல இருந்தா…? கொடிய வைரசால் அமல்படுத்தபட்ட ஊரடங்கு… பிரதமரின் அதிரடி அறிவிப்பு…!!

ஆக்லாந்தில் கொரோனா தொற்று  பரவல் காரணமாக தொடர்ந்து 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தபடுகிறது என அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா  அறிவித்துள்ளார். 

 நியூசிலாந்தில் உள்ள  மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான ஆக்லாந்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸானது பிரிட்டனில் உருமாற்றம் பெற்ற ஆபத்தான தொற்று என கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்த கொடிய உருமாற்றம் பெற்ற கொரோனா  வைரஸை கட்டுப்படுத்தும் பொருட்டு அடுத்த 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா அறிவித்துள்ளார். மேலும் இது குறித்து ஜெசிந்தா கூறும் போது, அனைத்து மக்களும் தங்களது வீடுகளுக்குள் இருக்க வேண்டும் எனவும், அவரச வேலைகளுக்கு மட்டும் வெளியே செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

இதனை அடுத்து கொரோனா வைரஸை  கட்டுப்படுத்தும் முயற்சியில் அரசு மிக தீவிரமான  ஈடுபட்டுள்ளதால், தொழில் நிறுவனங்களில் பணிபுரியும்  ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யுமாறும், மாணவர்கள்  வீட்டில் இருந்தே படிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார். மேலும் அவசியமற்ற பயணங்களை தவிர்ப்பதற்காக பிரிட்டன் எல்லையில் சோதனை சாவடிகளை அமைத்து அரசு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

Categories

Tech |