கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்த 150 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தபடும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றின் 2ஆம் அலை நாட்டில் மிக மோசமாக பரவி வருகிறது. இந்நிலையில் தொற்றின் பரவலை கட்டுப்படுத்துவது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இதனையடுத்து அனைத்து மாவட்டங்களில் தொற்றின் பாதிப்பு 15% மேல் இருந்தால் முழு ஊரடங்கு போடுவது குறித்து ஆலோசனை நடைபெற்றுள்ளது.
இதனைத்தொடர்ந்து 15% தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களின் கடுமையான பொதுமுடக்கம் அமல்படுத்துவதன் மூலம் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளனர். இதன்படி 150 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தபடும் என சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களும் அடங்கும். மேலும் இந்த பொதுமுடக்கம் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.