Categories
உலக செய்திகள்

“மறுபடியும் முதல இருந்தா” மீண்டும் மாயமான கிம் ஜாங் உன்…. பரவ தொடங்கிய வதந்திகள்…!!

அதிபர் கிம் ஜாங் உன் மீண்டும் மாயமானதை தொடர்ந்து அவர் பற்றிய தகவல்கள் மறுபடியும் பரவ தொடங்கியுள்ளது

சில மாதங்களுக்கு முன்பு வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் யார் கண்களிலும் படாமல் இருந்ததால் அவர் உயிரிழந்து விட்டதாகவும் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ததாகவும் பல வதந்திகள் பரப்பப்பட்டது. ஆனால் அனைத்தையும் பொய்யாக்கி உரத்தொழிற்சாலை திறப்பு விழாவிற்கு வந்து நின்றார் அதிபர் கிம் ஜாங் உன். தற்போது மீண்டும் அதிபர் கிம் பற்றிய வதந்திகள் பரவ தொடங்கியுள்ளது. காரணம் கடந்த மாதம் 7ஆம் தேதி கிம் ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். ஆனால் அதன் பிறகு இதுவரை வேறு எந்த பொது நிகழ்விலும் அவர் தென்படவில்லை.

இதனால் மீண்டும் அவரது ஆரோக்கியம் குறித்த பல வதந்திகள் பரவத் தொடங்கியுள்ளன. ஒருசிலர் கொரோனாவிடமிருந்து தப்புவதற்காக அதிபர் கிம் விலகி இருப்பதாகவும், சிலர்  அவருக்கு உடல் நலத்தில் ஏதோ பிரச்சனை இருப்பதால் முன்பு போல் அடிக்கடி பார்க்க இயலவில்லை என்றும் கூறிவருகின்றனர். 2020 ஆம் வருடம் கிம் ஜாங் உன் 20 முறை மட்டுமே பொது நிகழ்வில் பங்கேற்றதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளது. சமீபத்தில் ஜப்பானும் வடகொரிய அதிபரின் உடல்நிலையில் ஏராளமான சந்தேகங்கள் இருப்பதாகவும் அங்கு நடந்து வரும் இயக்கங்கள் அனைத்தும் விசித்திரமாக இருப்பதாகவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |