Categories
மாநில செய்திகள்

“மறுபரிசீலனை செய்யுங்க”… பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்…!!!

பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை தனியார் மயமாக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: நம் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்துமே நம் அனைவருடைய சொத்து ஆகும். அவற்றில் பலவும் இந்தியாவை தொழில்மயமான தற்சார்புடைய நாடாக நிலை நிறுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அத்தகைய பொதுத்துறை நிறுவனங்களை அமைப்பதற்காக மாநிலங்களுக்கு சொந்தமான அரசு நிலங்கள், மக்களின் நிலங்களும் வழங்கப்பட்டுள்ளது. அதனால் அந்த நிறுவனங்களின் மீது மக்களுக்கு பெருமையும், உரிமையும் உள்ளது. இந்த பணமாக்கல் எனும் நடவடிக்கையை நாட்டின் பொருளாதாரத்தின் மீதும், தொடர்புடைய நிறுவனங்களின் பணியாளர்கள் மீதும், சிறு குறு தொழில் துறை மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை.

எனவே நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையை வைத்து இவ்வளவு பெரிய அளவிலான தனியார்மயமாக்கல் நடவடிக்கையை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் அது விலைமதிப்பற்ற அரசு சொத்துக்கள் ஒரு சில குழுக்கள் அல்லது பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் செல்வதற்கு வழிவகுக்கும். எனவே மத்திய அரசின் பொதுத்துறை சொத்துக்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்த கடிதத்தில் முதல்வர் முக ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |