Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மறுபிரேத பரிசோதனை முடிந்தது….. மாணவியின் வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டீஸ்…..!!!!

கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், மாணவியின் உடல் இரண்டாவது முறையாக நேற்று  உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் மாணவியின் உருவபொம்மையை மாடியிலிருந்து வீசியும் சிபிசிஐடி காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் மறு பிரேத பரிசோதனை முடிந்ததற்கான நோட்டீஸ் மாணவியின் வீட்டில் ஒட்டப்பட்டுள்ளது.

அதில் பிரேத பரிசோதனை குறித்து தகவல் அனுப்பியும் நீங்கள் வரவில்லை, பிரேத பரிசோதனை முடிந்தது. உடலை வந்து பெற்றுக் கொள்ளுங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மறு பிரேத பரிசோதனையின் போது தங்கள் சார்பாக மருத்துவர் இருக்க வேண்டும் என மாணவியின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருந்தார். அது நிராகரிக்கப்பட்ட காரணத்தால் பெற்றோர் செல்லவில்லை.

Categories

Tech |