திருமணத்திற்கு மனைவி வர மறுத்ததால் ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள கருத்தானூர் பகுதியில் ஓட்டுநரான மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக சசிகலா மணியை விட்டு பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். நேற்று மணியின் தங்கை திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்திற்கு வருமாறு மணி சசிகலாவை அழைத்துள்ளார். ஆனால் அதற்கு சசிகலா மறுப்பு தெரிவித்ததால் மணி மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில் மணி காலை 7 மணியளவில் தங்கையின் திருமணத்தை சிறப்பாக நடத்தி முடித்தார். அதன்பிறகு மணி தனது வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.