Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மறுப்பு தெரிவித்த மனைவி…. வியாபாரி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

ஜவுளி வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள கீழப்பாவூர் செங்குந்தர் பிள்ளையார் கோவில் தெருவில் ஜவுளி வியாபாரியான ஜெகநாதன்(36) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயகுமாரி என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விஜயகுமாரி கோபத்தில் தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் மனைவியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வருவதற்காக ஜெகநாதன் மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

ஆனால் விஜயகுமாரி தனது கணவருடன் சேர்ந்து வாழ மறுப்பு தெரிவித்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஜெகநாதன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெகநாதனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |