Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மறுப்பு தெரிவித்த வாலிபர்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொப்பரம்பட்டியில் புஷ்பராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தீபா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீபா திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தீபா பரிதாபமாக இறந்துவிட்டார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திருமணத்திற்கு முன்பே தீபாவுக்கு வெள்ளைச்சாமி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தீபா வெள்ளைசாமியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். அதன் பிறகே தீபாவிற்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இதனால் மன உளைச்சலில் தீபா தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் வெள்ளைசாமியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |