வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள பெரியவள்ளிகுளம் ராமசாமிபுரத்தில் பாரதி தேவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரதீப் குமார்(22) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பிரதீப்குமாரை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 7 மாதங்களாக பிரதீப் குமார் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 7 நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்த பிரதீப் குமார் யாருடனும் பேசாமல் மது குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
ஆனால் பிரதீப் குமாருக்கு யாரும் பணம் கொடுக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த வாலிபர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.