தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் அதிக கனமழை பெய்யும் என்பதனால் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பல மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தொடர் கனமழையின் காரணமாக கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் மறு அறிவிப்பு வரை மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.