நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில்,கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதை அடுத்து தற்போது படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. அதில் முதல் கட்டமாக 9-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு வருகின்றன.
அதன்படி புதுச்சேரியில் தீபாவளிக்கு பிறகு 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கனமழை காரணமாக பள்ளிகள் திறக்கப்பட வில்லை.இந்த நிலையில் மழை காரணமாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகள் திறக்கப்படுவது ஒத்தி வைக்கப்படுகிறது. 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறும் என பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.