சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.
ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கோரோனோ இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன.
ஆனால் பெரும்பாலான நாடுகளில் கொரோனா பாதிப்பு எல்லையை மீறிச் சென்று விட்டது. அதனால் அனைத்து நாடுகளும் தவித்து வருகின்றன. இந்நிலையில் வங்கதேசத்தில் கொரோனா முழு ஊரடங்கு மே 16ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கொரோனா பரவலை தடுக்கும் விதமாக இந்தியா மற்றும் வங்கதேச எல்லை களை ஏப்ரல் 26ஆம் தேதி மூடியது. இவை இரண்டு பாரங்கள் அமலில் இருக்கும் என கூறிய நிலையில் தற்போது அடுத்த உத்தரவு வரும் வரை தடை அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது.