நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதனால் பல்வேறு தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் மறு அறிவிப்பு வரும் வரை ஒத்தி வைக்கப்படுவதாக புதுச்சேரி மாநில பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்னதாக மறு தேதிகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மறு அறிவிப்பு வரும்வரை மாணவர்களுக்கு வகுப்பு நடத்த வேண்டாம் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தனியார் மற்றும் அரசு பள்ளியில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தவும் அரசு தடை விதித்துள்ளது.