மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா அதிகரிப்பு காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது.
அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டன. அதன் பிறகு தற்போது வரை நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வந்தது. அதனால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள்.
இந்நிலையில் மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், குஜராத், கர்நாடகா மற்றும் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்தில் மீண்டும் இன்று பாதிப்பு அதிகரித்து உள்ளதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், பெரும்பாலான பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதனால் மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூட மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பால்கர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் மறு உத்தரவு வரும்வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கடந்த 4 நாட்களாக பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா உறுதியாகி வருவதால், மகாராஷ்டிரா அரசைப் போலவே தமிழக அரசும் பள்ளி மற்றும் கல்லூரிகளை மூட உத்தரவு பிறப்பிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.