Categories
தேசிய செய்திகள்

மறு திருமணம் செய்ய முயற்சித்த தந்தை…. மகன் செய்த கொடூர செயல்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள ராஜ்குருநகர் பகுதியில் சேகர் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இவர் பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். இவரின் தந்தை சங்கர்(80). சேகரின் தாய் 10 வருடங்களுக்கு முன் உயிரிழந்தார். சேகரின் தந்தை பெரும்பாலான நேரங்களை செய்தி தாள் வாசிப்பது மற்றும் செல்போன் பார்த்து செலவழித்து வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து சங்கர் கடந்த சில மாதங்களாக செய்தித்தாள்களில் வெளியாகும் திருமண தகவல்களை கண்காணித்து சில தகவல் மையங்களில் தனது பெயரை பதிவு செய்திருப்பதாக சேகரின் மனைவி,  சேகரிடம் கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று சேகர் மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்த போது, வீட்டில் அவரின் தந்தை மட்டும் தனியாக இருந்துள்ளார்.

அப்போது சேகர் அவரிடம் திருமண தகவல் மையத்தின் பெயர் பதிவு செய்துள்ளீர்களா? என்று கேட்டுள்ளார். அதை அவரது தந்தை இல்லை என்று கூறி மறுத்துள்ளார். அப்போது அவரது செல்போனை வாங்கி பார்த்தபோது அவர் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்ததும், அதற்கான கட்டணம் செலுத்தி இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சேகர் அவருடைய தந்தையை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை முயற்சி செய்துள்ளார். அதன்பிறகு கல்லை அவரது தலையில் அடித்துக் கொலை செய்துள்ளார். இதையடுத்து சேகர் காவல் நிலையத்திற்குச் சென்று தனது தந்தையை தற்கொலை செய்து விட்டதாக கூறி சரணடைந்துள்ளார். இது குறித்து போலீசார் ஐபிசி 302 இன் கீழ் சேகர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Categories

Tech |