Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“மறு தேர்தல் நடத்த வேண்டும்” அ.தி.மு.க-வினரின் போராட்டம்….. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

மறு தேர்தல் நடத்த வலியுறுத்தி அ.தி.மு.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. இங்கு 24 வார்டுகளில் நடைபெற்ற தேர்தலில் திமுக 21 வார்டுகளிலும், அதிமுக 24 வார்டுகளிலும், கூட்டணி கட்சியினர் 3 வார்டுகளிலும் போட்டியிட்டனர். இதில் அ.தி.மு.க நகர மன்ற தலைவர் வேட்பாளராக 2-வது வார்டில் மோகனா சரவணன் போட்டுள்ளார். இந்நிலையில் மதுராந்தகம்-சூனாம்பேடு சாலையில் மோகனா சரவணன் தலைமையில் அதிமுக வேட்பாளர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது நேற்று வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பதிவு எந்திரத்தில் முத்திரை இல்லை என்பதால் வாக்குப்பதிவு எந்திரத்தில் இருக்கும் அனைத்து வாக்குகளும் தி.மு.க-விற்கு விழுந்துள்ளதாகவும், தி.மு.க-வினர் வாக்கு எண்ணும் மையத்திற்குள் புகுந்து எந்திரங்களில் மாற்றி உள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அ.திமு.க-வினருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது மறு தேர்தல் நடத்த வேண்டும் என அ.தி.மு.க வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கு முறையாக மனு கொடுத்து மறு தேர்தல் நடத்துமாறு அதிகாரிகளிடம் கூறுங்கள் என போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்த பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |