துணிச்சலாக கருத்துக்கள் தெரிவித்து வருவது குறித்து சித்தார்த் பேசியுள்ளார் .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் சித்தார்த். சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சித்தார்த், அதில் தனது படங்களை பற்றி விளம்பரப்படுத்துவது மட்டுமல்லாது, அரசியல் ரீதியான கருத்துக்களையும் துணிச்சலுடன் வெளியிட்டு வருகிறார். மேலும் சில சமயம் சித்தார்த்தின் டுவீட்டுகள் சர்ச்சைகளில் சிக்குவதுண்டு. தற்போது சித்தார்த் சர்வானந்த்துடன் இணைந்து மகாசமுத்திரம் என்ற படத்தில் நடித்துள்ளார். அஜய் பூபதி இயக்கியுள்ள இந்த படத்தில் அதிதி ராவ், அனு இமானுவேல், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விரைவில் இந்த படம் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தை விளம்பரப்படுத்த பேட்டியளித்த, சித்தார்த் துணிச்சலாக கருத்துக்கள் தெரிவிப்பது குறித்து பேசியுள்ளார். அதில் அவர், ‘நான் என்னுடைய 8 வயதில் இருந்தே பொதுவெளியில் பேசி வருகிறேன். விஸ்வரூபம் பட ரிலீஸ் நேரத்தில் கமல் ஹாசனுக்கு பிரச்சினை ஏற்பட்டபோது தமிழ்நாடு அரசுக்கு எதிராக பேசினேன். என்றுமே அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் மனப்பான்மைக்கு எதிராக நான் எதிர்த்து பேசுவேன். என்னிடம் கருப்பு பணம் இல்லை. என்னிடம் மறைக்க எதுவும் இல்லை. எனக்கு பயமுமில்லை’ என கூறியுள்ளார்.