பிரபல வங்காள நடிகர் சவுமித்ரா சாட்டர்ஜி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார்.
பழம்பெரும் பெங்காலி நடிகர் சவுமித்ரா சாட்டர்ஜி (85) கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடலில் முக்கிய உறுப்புகள் செயலிழந்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தாதா சாகிப் பால்கே, பத்மபூஷன் உட்பட ஏராளமான விருதுகள் பெற்றுள்ளார்.
இவர் தீன் கன்யா என்ற திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதினை பெற்றார். உலகப் புகழ்பெற்ற இயக்குனர் சத்யஜித்ரேயின் ஏராளமான திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.