இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள், காவல்துறையினர் பணி இன்றியமையாதது. அதிலும் சிலர் கொரோனா காலத்தில் உயிரிழந்துள்ளனர்.
அதனால் மறைந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் மறைந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் ஓய்வூதியமானது, விண்ணப்பித்த ஒரு மாதத்திற்குள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் அனைத்து துறைகளும் உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்ப வாரிசு விண்ணப்பித்ததும், அந்த விண்ணப்பத்தை பரிசீலித்து சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.