Categories
தேசிய செய்திகள்

மறைந்த கணவருக்கு கோவில் கட்டி… வழிபாடு செய்யும் மனைவி…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

மறைந்த கணவரின் நினைவாக மனைவி ஒரு கோயிலை கட்டி அவரது சிலையை வைத்து வழிபாடு செய்யும் சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரப்பிரதேச மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் மறைந்த கணவருக்காக கோவில் கட்டி அதில் அவரின் உருவச்சிலையை வைத்து வழிபாடு நடத்தி வருகிறார் பத்மாவதி. இவர் பழமை வாய்ந்த குடும்பத்தை சேர்ந்தவர். தாயைப் போன்று இவரும் கணவரை மிகவும் நேசித்தார். இவரது கணவர் பெயர் அங்கிரெட்டி. கடந்த 4 வருடங்களுக்கு முன்பு அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். கணவர் உயிரிழந்த சோகம் தாங்க முடியாமல் பத்மாவதி தவித்து வந்துள்ளார். இதையடுத்து அவர் தனது கணவருக்கு கோயில் கட்டுவதற்கு முடிவு செய்தார்.

இந்த கோவிலில் தனது கணவரின் பளிங்கு உருவ சிலையை நிறுவி உள்ளார். கணவனின் பிறந்தநாள், நினைவு நாள், சிறப்பு நாட்கள் ஆகியவற்றில் சிலைக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தி வருகிறார். இந்த கோவிலில் பவுர்ணமி அன்று ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் நடைபெறுகிறது. இந்தக் கோவிலை கட்டுவதற்கு அவரது மகன் சிவசங்கர் ரெட்டி மற்றும் அவரது நண்பர்கள் உதவி செய்தனர். இந்த தம்பதியருக்கு மகனாகப் பிறந்தது என்னுடைய பாக்கியம் என்று அவர் பெருமையுடன் கூறியுள்ளார்.

Categories

Tech |