நடிகை மேக்னா இறந்த கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
கன்னட திரை உலகில் பிரபல நடிகராக இருந்தவர் சிரஞ்சீவி சர்ஜா. இவரது மனைவி பிரபல நடிகையான மேக்னாராஜ். சென்ற 2020 ஆம் வருடம் ஜூன் 7-ம் தேதி நடிகர் சிரஞ்சீவி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அப்போது நடிகை மேக்னாராஜ் 5 மகள் கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த நிலையில் தற்போது அவருக்கு ராயன்ராஜ் சர்ஜா என்கின்ற ஆண் குழந்தை இருக்கிறது. கணவர் உயிரிழந்த சோகத்தில் இருந்து வந்த நடிகை மேக்னா ராஜ் அதிலிருந்து மீண்டு சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றார்.
இந்த நிலையில் சிரஞ்சீவி சர்ஜா இறப்பிற்கு முன்பாக அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை மேக்னா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அழகாக இருக்கின்றது என உருக்கமாக பதிவிட்டு வருகின்றார்கள். மேகனா அண்மையில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்தி பரவிய நிலையில் தனது மகன் மற்றும் கணவரின் பெயரை கையில் பச்சை குத்திய புகைப்படத்தை பகிர்ந்து பதிலடி கொடுத்தார் குறிப்பிடத்தக்கது.
https://www.instagram.com/p/CiwRGZmoJiK/?utm_source=ig_embed&ig_rid=ad005a0c-283a-4a1e-aeb5-2d49036c3253