Categories
சினிமா தமிழ் சினிமா

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்திய சிவகார்த்திகேயன்… வெளியான புகைப்படம்…!!!

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் சமாதியில் சிவகார்த்திகேயன் அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாரடைப்பால் காலமானார். இவரது திடீர் மறைவால் திரையுலகினரும், ரசிகர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர் .

சிவகார்த்திகேயன்

ஞாயிற்றுக்கிழமை புனித் ராஜ்குமார் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் புனித் ராஜ்குமார் சமாதியில் நடிகர் சிவகார்த்திகேயன் அஞ்சலி செலுத்தி இருக்கிறார். மேலும் அவர் புனித் ராஜ்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Categories

Tech |