Categories
சினிமா

மறைந்த நடிகர் விவேக்கிற்கு கிடைக்கப்போகும் அந்தஸ்து…. என்னன்னு தெரியுமா?…. லீக்கான தகவல்…..!!!!!!

காமெடி நடிகர் விவேக் சென்ற வருடம் ஏப்ரல் 17ஆம் தேதியன்று திடீரென இறந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. திரை உலகில் தன் முற்போக்கு சிந்தனையால் சமூகசீர்திருத்தக் கருத்துகளை நகைச்சுவை வாயிலாக நடித்துக் காட்டியவர். இதன் காரணமாக சின்னக் கலைவாணர் என்று அவர் அழைக்கப்பட்டார். அவர் இறந்து ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில், அவருக்கு நினைவஞ்சலி கூட்டம் சென்னையில் நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியை விவேக்கிடம் மேலாளராக பணிபுரிந்த செல்முருகன் மற்றும் விவேக் பசுமை கலாம் அமைப்பை சேர்ந்தவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். இதில் பங்கேற்ற திமுக தலைமை நிலையப் பொறுப்பாளர் மற்றும் நடிகர்சங்க துணைத் தலைவரான பூச்சிமுருகன் பேசியதாவது, அவர் இறந்து விட்டார் என்பதனை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. சமூகத்திற்கான நல்ல கருத்துக்களை விதைத்தவர் அவர். தமிழகம் எங்கும் மரக்கன்றுகளை நட்டு வைத்தவர்.

இதனால் அந்த மரங்களின் வழியே எப்போதும் நம்முடன் விவேக் வாழ்ந்து கொண்டிருப்பார். முதல்வர் ஸ்டாலினிடம் சென்னையில் ஒரு தெருவுக்கு விவேக் பெயரை வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டேன். உரிய முறையில் கடிதம் கொடுத்தால் கண்டிப்பாக செய்யலாம் என்று முதல்வர் தெரிவித்திருக்கிறார். ஆகவே அதற்குரிய கடித்தை தயார் செய்யுங்கள் என்று பேசினார். இந்நிகழ்ச்சியில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், நடிகர் நந்தா, நடிகை லலிதா குமாரி, மீனாள் உள்பட பலரும் பங்கேற்றனர்.

Categories

Tech |