நடிகர் புனித் ராஜ்குமாரின் மாமனாரான ரேவந்த் மாரடைப்பால் காலமாகி உள்ளார்.
கன்னட சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் புனித் ராஜ்குமார் கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திடீர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு 46 வயது ஆகியிருந்தது. புனித் ராஜ்குமார் இறந்ததால் அவரின் மாமனார் மிகுந்த மன வருத்தத்தை அடைந்தார். ராஜ்குமாரை பற்றிய கவலையிலேயே இவருக்கு உடல்நிலை மோசமானது. இந்நிலையில் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் இவரை பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புனித் ராஜ்குமார் அவரின் கண்களை தானம் செய்து இருந்தார். அதுபோல அவரின் மாமனாரான ரேவந்த்தும் கண் தானம் செய்து இருக்கின்றார். இவருக்கு வயது 78. புனித் ராஜ்குமாரின் மனைவியான அஸ்வினி தற்போது கணவன், தந்தை என இருவரையும் இழந்து கவலையில் வாடுகின்றார். இதனை தொடர்ந்து புனித் ராஜ்குமார் இறுதியாக நடித்த ஜேம்ஸ் திரைப்படமானது மார்ச் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது. புனித் ராஜ்குமாருக்கு கௌரவிக்கும் வகையில் படம் ரிலீஸாகும் அந்த வாரத்திற்கு வேறு எந்த திரைப்படமும் திரையரங்குகளில் ஓடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.