Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“மறைந்த மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து”… உருக்கமாக டுவிட் செய்த அருண்ராஜா காமராஜ்…!!!!

அருண்ராஜா காமராஜ் மறைந்த தனது மனைவியின் பிறந்த நாளையொட்டி உருக்கமாக ட்விட்டரில் பதிவொன்றை போட்டுள்ளார்.

தமிழ் சினிமா உலகில் இயக்குனர், எழுத்தாளர், பாடகர், நடிகர் என தனுக்குள் பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார் அருண்ராஜா காமராஜ். இவர் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இவரின் மனைவி சிந்துஜா சென்ற வருடம் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

அருண்ராஜா காமராஜூம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று தனது மனைவியின் பிறந்த நாளை முன்னிட்டு உருக்கமான பதிவு ஒன்றை ட்விட்டரில் போட்டுள்ளார். அவர் அதில் தனது மனைவி ஓவியத்தை பகிர்ந்து “எப்போதும் உன்னை மிஸ் பண்ணுகிறேன்… பிறந்தநாள் வாழ்த்துக்கள் பப்பி” என பகிர்ந்துள்ளார்.

Categories

Tech |