Categories
சினிமா தமிழ் சினிமா

மறைமுகமாக தாக்கி பேசிய மாளவிகா மோகனன்…. பதிலடி கொடுத்த நயன்தாரா…. நடந்தது என்ன?…!!!!

“கனெக்ட்” திரைப்படம் குறித்து நயன்தாரா ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அந்த பேட்டியில், நடிகைகளுக்கும், நடிகர்கள் அளவுக்கு மரியாதை தரப்பட வேண்டும். பட விழாக்களுக்கு சென்றால் கூட நடிகர் தான் முன்னிலைப்படுத்தப்படுவார். என்னை ஓரமாக நிற்கவைத்து விடுவார்கள்.

இதன் காரணமாக தான் நான் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு செல்வதில்லை என தெரிவித்து இருக்கிறார். முன்னதாக நடிகை மாளவிகா மோகனன் ஒரு பேட்டியில் “ஒரு ஹாஸ்பிடல் சீனில் ஹீரோயினி முழு மேக்கப் உடன், முடி கூட களையாமல் இருப்பார்” என நயன்தாரா பெயரை குறிப்பிடாமல் தாக்கி பேசியிருந்தார்.

அவரது பேச்சுக்கு பதிலடி கொடுத்து நயன்தாரா பேட்டியில் கூறியதாவது “அதுக்காக முடியை விரிச்சு போட்டுட்டா உட்கார்ந்து இருக்கமுடியும். ரியலிஸ்டிக் மற்றும் கமர்சியல் படங்களுக்கு வித்தியாசம் உள்ளது. சோகமாக இருக்க கூடாது என இயக்குனர் தெரிவித்தார். அவர்களுக்கு தேவையான விதத்தில் தான் நடிக்க கூறுவார்கள். ஆகவே அதுபோன்று தான் நானும் நடித்தேன்” என பதிலடி கொடுத்திருக்கிறார்.

https://twitter.com/suria____/status/1605517252874293249?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1605517252874293249%7Ctwgr%5E1f9e195e402dea07c9f587804d5b6715b8a810a4%7Ctwcon%5Es1_c10&ref_url=http%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F

Categories

Tech |