Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

மறைமுகமாக விஜய்யை சாடிய சூர்யா… அப்படி என்ன பேசுனாரு தெரியுமா…???

சூர்யாவின் பேச்சால் விஜய் ரசிகர்களுக்கிடையே சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. அவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இவ்விரு திரைப்படங்களும் ஓடிடியில் வெளியானதால் ரசிகர்கள் கவலைப்பட்டனர். இந்நிலையில் மூன்று வருடங்களுக்குப் பிறகு திரையரங்கில் தற்போது எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரிலீசாகி உள்ளது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

இந்நிலையில் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பேசியபொழுது, நேருக்குநேர் திரைப்படத்தில் நடிக்கும் பொழுது மற்றொரு நடிகருக்கு கிடைக்கும் ஆதரவு எனக்கும் கிடைக்க வேண்டும் என எண்ணினேன் என்று கூறியுள்ளார். இது ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. சூர்யாவுடன் நேருக்கு நேர் திரைப்படத்தில் நடித்தது விஜய் தான். பெயரை குறிப்பிடாமல் சூரர்யா பேசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. சூர்யாவுக்கு விஜய்யின் மேல் அப்படி என்ன கோபம் என ரசிகர்கள் சிலர் கேட்டு வருகின்றனர்.

Categories

Tech |