சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் நகர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மறைவான பகுதியில் சாராயம் விற்றுக்கொண்டிருந்த நபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் வேதாரண்யம் பகுதியில் வசித்து வரும் நாகராஜன் என்பதும், சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. மேலும் நாகராஜன் மீது வழக்கு பதிந்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.