Categories
உலக செய்திகள்

மற்றொரு நமஸ்தே டிரம்ப் நடத்துவாரா மோடி?… ப.சிதம்பரம் அதிரடி பேச்சு…!!!

இந்தியாவை நெருங்கிய நட்பு நாடு என்று கூறிய அமெரிக்க அதிபர் தற்போது இந்தியாவை இழிவுபடுத்திப் பேசியுள்ளார்.

அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடக்க உள்ளது. அதனால் வேட்பாளர்கள் அனைவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறு நடந்த பிரச்சாரத்தின் போது இந்தியாவை நட்பு நாடு என்று கூறிவந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தற்போது புவி வெப்பமடைதலுக்கு இந்தியா தான் முக்கிய காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். அதனைப்போலவே சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளும் காற்றில் பறக்க விட்டு வருவதாக கூறியுள்ளார். இது குறித்து முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறுகையில்,” அமெரிக்க அதிபர் தேர்தல் நேரடி விவாதத்தின்போது 47 ஆண்டுகளில் நீங்கள் செய்ததைவிட 47 மாதங்களில் நான் செய்திருக்கிறேன் என்று டோனால்ட் டிரம்ப் கூறியிருக்கிறார்.

இந்த அறிக்கை இந்தியாவில் இருக்கின்ற ஒருவரை உங்களுக்கு நினைவு கூர்ந்தால் அது உங்களின் கற்பனை. கொரோனாவால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளை இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் மறைத்து வருவதாக ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.அதுமட்டுமன்றி அதிக அளவில் காற்று மாசுபடுவதற்கு இந்த நாடுகள் தான் முக்கிய காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். இவ்வாறான சூழலில் பிரதமர் மோடி அவர்கள் தனது நெருங்கிய நண்பரை கௌரவப்படுத்த மற்றொரு ‘நமஸ்தே டிரம்ப்!’நிகழ்ச்சியை நடத்துவாரா?”என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |