வலிமை திரைப்படத்தின் கலெக்சன் மற்ற கலெக்சன் சாதனைகளை எல்லாம் முறியடித்து விட்டதாக கூறப்படுகிறது.
நடிகர் அஜித், எச்.வினோத், போனிகபூர் கூட்டணியில் நடந்த 2019ஆம் ஆண்டு வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழித்து அதே கூட்டணியில் தற்போது வலிமை திரைப்படம் வெளியாகியுள்ளது. நீண்ட காத்திருப்புக்கு பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என மொத்தம் நான்கு மொழி திரைப்படங்களில் வெளியாகியுள்ளது.
வலிமை படம் கடந்த வியாழக்கிழமை முதல் திரையிடப்பட்டுள்ளது. விடுமுறை அல்லாத தினத்தில் வெளியான முதல்நாள் கலெக்சன் மற்ற படங்களில் கலெக்சன் சாதனைகள் எல்லாம் முறியடித்து விட்டதாக கூறப்படுகிறது. திரைப்படத்தின் முதல் நாள் 25 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. ரஜினியின் அண்ணாத்த படம் 24 கோடியும், விஜயின் சர்க்கார் படம் 23 கோடியும் வசூலித்து இருந்தது. இந்நிலையில் வலிமை படம் விஜய் மற்றும் ரஜினியின் சாதனைகளை முறியடித்து 25 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. ரசிகர்கள் திரையுலக பிரபலங்களும் படம் குறித்து பட குழுவினருக்கு வாழ்த்துகள் இணையதளத்தில் தெரிவித்து வருகின்றனர்.