கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கின்ற திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் முதல் பாகம் வருகின்ற 30ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றார்கள். இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றுள்ளது. இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி திரை பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவில் ஜெயம் ரவி கலந்து கொண்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடித்ததற்கும் மணிரத்தினம் படத்தில் நடித்ததற்கு என்ன வித்தியாசம் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது மற்ற படங்களும் மணிரத்னம் படத்திற்கும் உள்ள வித்தியாசத்தை நானே தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன்.
மற்ற படங்களில் வசனத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் ஆனால் மணிரத்தினம் படத்தில் வசனத்தை விட உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார் என தெரிவித்துள்ளார். மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் உங்களுடன் பிரபு சரத்குமார், விக்ரம், கார்த்தி என பல கதாநாயகர்கள் நடித்திருக்கின்றார்கள் உங்களுடன் போட்டி இருந்ததா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு பிரபுவுடன் நான் ஏற்கனவே நடித்திருக்கின்றேன் என்னிடம் ஏதாவது தவறாக தெரிந்தால் ஒரு மூத்த நடிகர் எனும் முறையில் திருத்தங்கள் சொல்வார். ஆனால் அவர் மகனிடம் கூட அப்படி சொல்ல மாட்டார் என் மீது அவருக்கு பாசம் அதிகம் விக்ரம் பிரபுவிடம் ஏதாவது குறை தெரிந்தால் அதை நேரடியாக அவர் சொல்ல மாட்டார் என் மூலம் சொல்ல செய்வார். கதாநாயகர்களுக்குள் போட்டி இருந்தது உண்மை அது ஆரோக்கியமான போட்டி தான் என தெரிவித்துள்ளார். மேலும் ராஜராஜ சோழனாக நடிக்க உங்களிடம் மணிரத்தினம் சொன்ன முக்கிய அறிவுரை என்ன எனும் கேள்விக்கு படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு போன பிறகும் ராஜராஜ சோழனை மறந்து விடாதே உன் உடை நடை பேச்சு எல்லாவற்றிலும் ராஜராஜ சோழன் இருக்க வேண்டும் என மணிரத்தினம் கூறியிருந்தார் என தெரிவித்துள்ளார்.