மலச்சிக்கல், வாயு மற்றும் வயிறு உப்பசம் போன்ற பிரச்சனைகள் நீங்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும்.
நம் அன்றாட வாழ்வின் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. ஆபரணம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் சில வகைகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. அதிலும் குறிப்பாக பெரும்பாலானோருக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது மலச்சிக்கல் பிரச்சனை.
அதனை சரி செய்ய அகத்திக்கீரை, வெந்தயக் கீரை ஒரு கைப்பிடி, ஓமம் 5 கிராம், மிளகு 5 கிராம், சீரகம் 5 கிராம், பூண்டு 5 பற்கள், காய்ந்த மிளகாய்-3, தண்ணீர் அரை லிட்டர், உப்பு மற்றும் பெருங்காயம் தேவையான அளவு. உப்பு மற்றும் பெருங்காயம் தவிர அனைத்தையும் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, பாதியாக சுண்ட விட வேண்டும். அதன் பிறகு அதனுடன் உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து சாப்பிட்டால் மலச்சிக்கல், வாயு, வயிறு உப்பசம் மற்றும் குடல் புண் ஆகியவை குணமாகும். இதனை அனைத்து வயதினரும் பருகலாம். உங்களின் பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வாக இது அமையும்.