Categories
மாநில செய்திகள்

மலர்கண்காட்சி: நீலகிரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!!!

ஆண்டுதோறும் ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஆன்லைன் வாயிலாக கண்காட்சி நடந்தது. மக்கள் வீட்டில் இருந்தபடி தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு வண்ண செடிகளை கண்டு ரசித்தனர். தற்போது தொற்று முழுவதும் குறைந்து சுற்றுலா பயணிகள் வருகையும் கடந்த சில மாதங்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது. இதையடுத்து 2 ஆண்டுகளுக்கு பிறகு ஊட்டி தாவரவியல் பூங்காவில் 124வது மலர் கண்காட்சி 20ம் தேதி இன்று முதல் வருகிற 24ம் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.

இந்த கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி வைக்கிறார். அதன் பின்னர் மலர் மாடங்களை பார்வையிடுகிறார். இந்த நிலையில், மலர்க்கண்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு இன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ஈடுசெய்ய 4ம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு பணி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |