Categories
மாநில செய்திகள்

மலர்ந்தது 2022….. மக்கள் உற்சாகமாகக் கொண்டாட்டம்…. தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை….!!

உலக நாடு முழுவதும் வாணவேடிக்கைகளடன் 2022 ஆங்கில புத்தாண்டை வரவேற்று அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடி இருந்தனர். ஒமைக்ரான் பரவலின் மத்தியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டது. அதன்படி ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. அதில் திருச்சி மாவட்டத்தில் உலக மீட்பர் பசிலிக்கா சகாய மாதா தேவாலயம், புனித மரியன்னை பேராலயம், தூய லூர்து அன்னை ஆலயம் உள்ளிட்ட சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது . அதனை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த மேட்டுப்பட்டி தேவாலயத்தில் புத்தாண்டு சிறப்பு திருப்பலியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினர்.

சென்னையை அடுத்த பரங்கிமலை புனித பேட்ரீக் தேவாலயத்தில் ஸ்டீபன் தலைமையில் கொரோனா நோயின்றி மக்கள் மகிழ்ச்சியுடன் மற்றும் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் 150 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் பங்குச்சந்தை லியோன் மற்றும் சகாயராஜ் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் ஏராளமான மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிறிஸ்துவ தேவாலயங்களில் நடைபெறும் நள்ளிரவு முதல் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. காஞ்சிபுரம் ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள புனித அன்னை வேலாங்கண்ணி ஆலயத்தில் 2021 ஆம் ஆண்டில் கடைசி ஆராதனை மற்றும் 2022 ஆம் ஆண்டின் முதல் ஆராதனை வெகு விமர்சியாக நடைபெற்றது.

இந்த ஆராதனையை ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர். குமரி மாவட்டம் இரவிபுத்தன்துறை புனித கேத்தரின் தேவாலயத்தில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் புத்தாடைகளை அணிந்து சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு இரவு 12 மணி முதல் 2 மணி வரை புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. மேலும் திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி புனித லூர்து அன்னை ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு புத்தாண்டை வரவேற்றனர். தமிழகம் எங்கும் உள்ள தேவாலயங்களில் உலக நன்மைக்காக மற்றும் கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் விடுபடுவதற்காக சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.

Categories

Tech |