Categories
மாநில செய்திகள்

மலர் கண்காட்சியின் நிறைவுநாள்… சர்ப்ரைஸ் விசிட் அடித்த முதல்வர் ஸ்டாலின்….!!!!!

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி திமுக சார்பாகவும், தமிழக அரசு சார்பிலும் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வகையில் சென்னையில் மலர் கண்காட்சியானது நடத்தப்பட்டது. ஊட்டியிலுள்ள மலர் கண்காட்சிக்கு இணையாக சென்னையில் மலர் கண்காட்சியானது நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. பொது மக்கள் மலர் கண்காட்சியை பார்வையிட காலை 9 மணிமுதல் இரவு 8 மணிவரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மலர் கண்காட்சிக்கான நுழைவுக்கட்டணமாக பெரியவர்களுக்கு ரூபாய் 50ஆம், மாணவர்களுக்கு ரூபாய் 20ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சியில் பெங்களூரு, கிருஷ்ணகிரி, உதகை, புனே, ஏற்காடு, கொடைக்கானல் முக்கிய பகுதிகளிலிருந்து 200க்கும் அதிகமான மலர் வகைகள் கொண்டு வரப்பட்டு காட்சிபடுத்தப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் மலர்களால் வடிவமைக்கப்பட்ட மயில், குதிரை, சிங்கம், கரடி, சிற்பங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கண்காட்சிக்கு வரக்கூடிய மக்கள் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காக செல்பி ஸ்பாட்டும் அமைக்கப்பட்டுள்ளது. மலர் கண்காட்சியில் பழங்களால் செதுக்கப்பட்ட கவிஞர் பாரதியார், முன்னாள் முதலமைச்சர்கள் அறிஞர் அண்ணா, கருணாநிதி போன்றோரின் முகங்கள் சிற்பங்களும், முதல்வர் மு.க.ஸ்டாலின் முகத்தை போல் செதுக்கப்பட்ட பழமும் இதில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்ற 3-ஆம் தேதி முதல் சென்னை கலைவாணர்அரங்கில் நடந்து வரும் கண்கவர் மலர் கண்காட்சியானது இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்கவர் மலர் கண்காட்சியை நேரில் சென்று பார்வையிட்டார். இதற்கிடையில் இன்று விடுமுறை தினம் என்பதால் மலர் கண்காட்சியை பார்வையிட ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது. சென்னை மக்களின் மனஅழுத்தத்தைப் போக்கும் வகையில் இனி வருடந்தோறும் ஜூன் 3ஆம் தேதி மலர் கண்காட்சி நடத்தப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |