Categories
டெக்னாலஜி பல்சுவை

மலிவு விலையில் எலெக்ட்ரிக் சைக்கிள்… இதில் என்ன ஸ்பெஷல்…? வாங்க பார்க்கலாம்…!!!

மலிவு விலையில் எலக்ட்ரிக் சைக்கிளை கோஜீரோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டு வருவது பொதுமக்களை மேலும் கவலை அடையச் செய்கின்றது. இதற்கிடையே எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மவுசு அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. மேலும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு அரசு மானிய தொகையை உயர்த்தி வழங்குவதால் மக்கள் போட்டி போட்டுக்கொண்டு எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கி வருகின்றனர். இந்நிலையில் கோஜீரோ நிறுவனம் குறைந்த விலையில் எலக்ட்ரிக் சைக்கிள் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

ஸ்கெல்லிக் லைட் (Skellig Lite) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சைக்கிள் மாடல் விரைவில் ஆன்லைனில் விற்பனைக்கு வர உள்ளது. இதை வாங்க விரும்புவர்கள் 2,999 ரூபாய் கொடுத்து முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த சைக்கிளின் விலை 19,999 ரூபாய் ஆகும். பயணிகள் நகரங்களுக்குள் சௌகரியமான வகையில் பயணிக்கும் வகையில் இந்த சைக்கிள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக 25 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்ய முடியும். பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் இரண்டரை மணி நேரத்திற்கு மேலும் நம்மால் பயணம் செய்ய முடியும்.

Categories

Tech |