நாடு முழுதும் கொரோனா காலக்கட்டதின் தொடங்கிய பின் இந்திய மக்கள் ஏராளமாக தங்க பத்திரங்களில் முதலீடு செய்து இருந்தனர். அதிலும் தமிழ்நாட்டில் தங்க பத்திரங்களுக்கு வெகுவான வரவேற்பு இருந்தது. ஆனால் கொரோனா காலத்தில் பங்குச் சந்தைகள் நிலையின்றி இருந்ததால் தங்க பத்திரங்களில் பாதுகாப்பாக முதலீடு செய்தனர். அதனைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. ஆனால் ஒட்டுமொத்த தங்கப்பாத்திரங்களில் 75% பத்திரங்கள் 2020 முதல் 2022 வரை மட்டுமே விற்பனையாகியுள்ளது.
இந்நிலையில் நடப்பு நிதியாண்டுக்கான முதல் தொகுப்பு தங்க பத்திரங்கள் இன்று முதல் ஜூன் 24-ஆம் தேதி வரை விற்பனை செய்யப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த முறை பாத்திரங்களின் விலை கிராமுக்கு ரூ.5091 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தங்க பத்திரங்களை ஆன்லைனில் வாங்கலாம் ரூ.5041 விற்பனை செய்யப்படும். மேலும் வங்கிகள், தபால் அலுவலகங்கள் மற்றும் பங்குச் சந்தை மூலம் தங்க பத்திரங்களை வாங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கப் பத்திரத்தில் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
- தங்கத்தை பாதுகாப்பாக சேமித்து வைப்பது போல் தங்கப் பாத்திரத்தை சேமிக்க தேவையில்லை.
- ஆண்டுக்கு 2.5% வட்டி தொகை செலுத்தப்படும். தங்கப் பாத்திரத்தை வைத்து கடன் வாங்கலாம்.
- தங்க பத்திரங்களுக்கு ஜிஎஸ்டி கிடையாது.
- தங்க பத்திரங்களுக்கு கேபிடல் கெயின்ஸ் வரி கிடையாது.
- பங்குச் சந்தைகளில் தங்க பத்திரங்களை வர்த்தகம் செய்யலாம்.
- தங்க பத்திரங்களுக்கு மத்திய அரசின் உத்தரவாதம் இருப்பதால் மிக பாதுகாப்பான முதலீடு ஆகும்.